Ask Anand Srinivasan

Anand-Srinivasan-Images-1

உங்களுக்கு என் குறிப்புகள்

உங்களுக்கு என் குறிப்புகள்

பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள்

உங்கள் வருமானத்திற்கு ஏற்ப உங்கள் மாதாந்திர பட்ஜெட்டை தயார் செய்து, ஒதுக்கப்பட்ட நிதியை அந்தந்த சேமிப்பில் வைக்கவும். நீங்கள் செலவு செய்யும் போது, ​​அந்தந்த சேமிப்பிலிருந்து தேவையான நிதியை எடுத்துக்கொண்டு, மற்றொரு சேமிப்பிலிருந்து நீங்கள் எடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சேமிக்க பழகுங்கள்...! கண்டிப்பாக சேமியுங்கள்!!

சேமிப்பு என்பது நீங்கள் செய்ய வேண்டிய முதல் செலவு. நீங்கள் வெவ்வேறு செலவிற்கு நிதி
ஒதுக்கும் போது, ​​முதலில் சேமிப்பு என்று சிறிது ஒதுக்க வேண்டும். சேமிப்பின்
முக்கியத்துவத்தை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். உங்கள் வருமானத்திற்கு
ஏற்ப உங்கள் சேமிப்பை திட்டமிடுங்கள். இன்று விதைக்கப்பட்ட மா விதை இரண்டு
தசாப்தங்களில் மாந்தோப்பாக மாறும் என்பதால் சேமிப்பு பழக்கத்தை உடனே
தொடங்குங்கள்.

கண்டிப்பாக காப்பீடு செய்யுங்கள்

உங்கள் முழு குடும்பத்திற்கும் ஒரு சுகாதார காப்பீடு செய்து கொள்ளுங்கள். உடல்நலம்
தொடர்பான அவசர சூழ்நிலைகளில் அது மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் உங்கள்
குடும்பத்தை பார்த்துக்கொள்பவராக இருந்தால், உங்களால் முடியாத போது உங்கள்
குடும்பத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் கால வரையறையுள்ள காப்பீட்டை தேர்வு செய்து
கொள்ளுங்கள். இந்த காப்பீடுகளுக்கு தேவையான நிதி கூடுதல் செலவாகத் தோன்றலாம்.
இருப்பினும், உங்களிடம் உள்ள சில்லறை பணத்தை தினசரி சேமித்து அதை காப்பீட்டுத்
தொகையாக எண்ணிக்கொள்ளுங்கள். அது உங்கள் சுமையை குறைக்கும்.