பங்குச் சந்தை என்பது இன்றைய நவீன உலகில் பொருளாதார செயல்பாடுகளில் மட்டுமில்லாமல் நிறுவனங்கள், தனிமனிதர்கள் என்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது, முதலீடுகளில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உள்ளீடு செய்யப்பட்ட பிறகு பங்குச் சந்தைகள் எளிமையாகக் கையாளக் கூடிய முதலீட்டு வகையாக மாற்றி இருக்கிறது, இன்று ஒரு சாதாரண மனிதரும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய முடியும், பரிவர்த்தனைகள் செய்ய முடியும், குறிப்பாக அலைபேசிகளில் இருந்தே பங்குச் சந்தை முதலீடுகளைக் கையாள்கிற, இயக்குகிற தொழில்நுட்ப வசதி உருவாகி இருக்கும் சூழலில் இந்த நூலானது பங்குச் சந்தைகளின் அடிப்படையைப் பற்றி புரிந்து கொள்ள வழிவகுக்கும் மிகச் சிறந்த நூல்களில் ஒன்று, தமிழில் பங்குச் சந்தைகளைக் குறித்த நூல்கள் அரிதாக இருந்த நிலையில் எளிய தமிழில், அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டாளர்களுக்கும், பங்குச் சந்தைகளுக்கு உள்ள தொடர்பை, பல்வேறு வகையான முதலீட்டு வகைகளை, பங்குச் சந்தைப் பத்திரங்களைக் குறித்து எழுதப்பட்டிருக்கும் மிகச் சிறந்த நூல் இது என்றால் அது மிகையில்லை.
Reviews
There are no reviews yet.