Ask Anand Srinivasan

Anand-Srinivasan-Images-1

ஆனந்திடம் கேளுங்கள்

எனக்கு வரும் பொதுவான கேள்விகளின் பட்டியல் மற்றும் அந்த கேள்விகளுக்கான எனது பதில்.
எந்த பங்குகளை வாங்க வேண்டும்?

பங்குகளை ஆராய கற்றுக்கொள்ள வேண்டும், பரிந்துரைகளைப் மட்டும் பார்க்கக்கூடாது.
மீன் சாப்பிடுவதற்கு முன்பு மீன் பிடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் ஏதேனும் பரிந்துரைக்க முடியுமா?

ஒரு நிஃப்டி குறியீட்டு நிதியுடன் ஒரு நிஃப்டி அடுத்த நிதியையும் வாங்கவும்.

முதலீடு செய்ய தனிநபர் கடன் வாங்கலாமா?

முதலீடு செய்ய ஒருபோதும் கடன் வாங்காதீர்கள். அனாவசிய செலவு உங்களை திவாலாக்கி
விடும்

EMI இல் வீடு வாங்கலாமா?

மொத்த விலையில்  20% போட்ட பிறகு, EMI வாடகைக்கு சமமாக இல்லை என்றால் வீடு
வாங்க வேண்டாம்.

தங்கப்  பத்திரத்தை வாங்கலாமா?

புதிதாக வாங்கும் தங்கத்தை அடுத்த ஐந்து வருடத்திற்குள் அடகு வைக்க தேவை
இருக்காது என்ற நிதிச் சூழலில் நீங்கள் இருக்கும்பொழுது நீங்கள் ஒரு SGB- ஐ (தங்கப் 
பத்திரத்தை) வாங்கலாம். இல்லையெனில் தங்கத்தில் செய்த முதலீட்டிற்காக நீங்கள்
பெறவேண்டிய பலன் வட்டியாக போய்விடும்.
பணம் அல்லது தங்கம் தேவையில்லாமல் 5 வருடங்கள் காத்திருக்க முடிந்தால் நீங்கள் ஒரு
SGB- ஐ (தங்கப்  பத்திரத்தை) வாங்கலாம். இல்லையெனில், SGB- ஐ வாங்குவதைத்
தவிர்ப்பது நல்லது. கையில் பணம் இல்லாதபோது உடனடி பண தேவையை தங்கம்
உங்களுக்கு கொடுக்கும்.

முதலீடு பற்றி அறிய எந்தப் புத்தகங்களைப் படிக்கவேண்டும்?

பீட்டர் லிஞ்ச் எழுதிய Learn to earn and beating the street மற்றும் ஆனந்த் சீனிவாசனின்
Ordinary stocks and extraordinary profits.

எந்த முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களை பின்பற்ற வேண்டும்?

வாரன் பஃபெட், சார்லி முங்கர், மோனிஷ் பப்ராய், கை ஸ்பியர், ஜார்ஜ் சோரோஸ், ராபர்ட்
ஷில்லர் மற்றும் ரகுராம் ராஜன்.

நான் தங்கத்தை வாங்கலாமா?

ஒருவர் அவசர உபயோகத்திற்காக 400 கிராம் வரை தங்கம் வைத்திருக்க வேண்டும். தங்கம்
போன்று பிரச்சனையின் போது எதுவும் உதவாது.

கடன்களை மூட வேண்டுமா அல்லது முதலீடு செய்ய வேண்டுமா?

எந்தவொரு பெரிய முதலீடுகளையும் செய்வதற்கு முன்பு அனைத்து தனிப்பட்ட கடன்களை
அடைக்க வேண்டும். நீங்கள் தொடரக்கூடிய ஒரே கடன் ஏற்கனவே இருக்கும் வீட்டுக்கடனாக
இருக்கவேண்டும்.

எல்ஐசி நல்ல முதலீடா?

எல்ஐசி ஒரு சிறந்த முதலீடு இல்லை. நீங்கள் காப்பீட்டில் முதலீட்டை கலக்கும்போது,
உங்களுக்கு சரியான காப்பீடோ அல்லது முதலீடோ கிடைக்காது.